உலகக்கோப்பையில் தோல்வியடைந்த இந்தியா.. ரசிகர் உயிரிழப்பு ..!

By

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை  இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி உள்ளது. ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததால் கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

   
   

மைதானத்தில் இருந்த ரசிகர்களுடன், டிவிக்களில் போட்டியை பார்த்த ஒட்டு மொத்த ரசிகர்களால் இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த தோல்வியை தாங்க முடியாமல் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருப்பதி ரூரல் மண்டல் துர்காசமுத்திரத்தைச் சேர்ந்த மண்டியம் சுதாகரின் மகன் ஜோதிகுமார் யாதவ் (32), எம்சிஏ படித்துவிட்டு சாப்ட்வேர் வேலை செய்து வருகிறார்.

தற்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையில் பணியாற்றி வருகிறார். ஜோதி குமார் யாதவ், சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும் தனது நண்பர்களுடன் வீட்டில் இருந்து இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளார். இந்த போட்டியின் பரபரப்பு காரணமாக இரவு 7 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் துர்காசமுத்திரம் சோகத்தில் மூழ்கியது.

 

Dinasuvadu Media @2023