ஐபிஎல்2024 : ‘அடிச்சா அடி..இடிச்சா இடி’! கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஐபிஎல்2024 : கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் சாதனையை  விராட் கோலி முறியடித்தார்.

நேற்று சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்தார். அது என்ன சாதனை என்றால் ஒரு அணிக்காக அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை தான். நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர்கள் அடித்தார்.

அந்த  போட்டியில் அவர் 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அவர் பெங்களூர் அணிக்காக அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 241-ஆனது. எனவே, இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் ஒரு அணிக்காக விளையாடி அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். இதற்கு முன்னதாக பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் 239 சிக்ஸர்கள் அடித்து இருந்தார்.

கிறிஸ் கெயில் தான் பெங்களூர் அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை  வைத்திருந்த நிலையில் தற்போது அவரை விராட் கோலி மிஞ்சியுள்ளார். அதைப்போலவே, ஐபிஎல் வரலாற்றில் மொத்தமாக அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலிலும் எம்எஸ்தோனியை விராட் கோலி பின்னுக்கு தள்ளி உள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் எம்.எஸ்.தோனி 239 சிக்ஸர்கள் அடித்து 4-வது இடத்தில் இருந்தார். நேற்றய போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர் அடித்து 241 சிக்ஸர்களை பதிவு செய்து தோனியை பின்னுக்கு தள்ளினார்.

KKR VS RCB : மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 83 * ரன்கள் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.