முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கில் இன்று தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வழக்கில் இன்று தீர்ப்பு வரஉள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.

தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. எஸ்பி வேலுமணி மீது டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சி பணிகள் தொடர்பாக ரூ.800 கோடி அளவுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு என வழக்கு பதிவு செய்யப்பட்டன. இதுபோன்று எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலுமணி ஆதரவாளர்களுக்கு டெண்டர் வழங்க விதிகள் மாற்றி அமைக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றசாட்டை முன் வைத்துள்ளது. எனவே, டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாகவும் வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் வேலுமணி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், ஆர்எம் டீக்காராமன் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. வேலுமணியின் வழக்கில் இன்று தீர்ப்பு வரஉள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment