#BREAKING: திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகள் வெளியானது..!

விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு  ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது.

அந்த வகையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு சட்டப்பேரவையில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிய நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

  • வானூர்,
  • அரக்கோணம்,
  • செய்யூர்,
  • நாகப்பட்டினம்,
  • திருப்போரூர்,
  • காட்டுமன்னார்கோயில்,

author avatar
murugan