கமலின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது … வானதி சீனிவாசன் விமர்சனம்!

Vanathi Srinivasan: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று உறுதி செய்தார். மநீம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று திமுக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசிச்சுவார்தை நடத்தினார்.

Read More – திமுகவுக்கு ஆதரவு.. மக்களவையில் நான் போட்டியிடவில்லை.! – கமல்ஹாசன் அறிவிப்பு.!

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது, திமுக கூட்டணியில், மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மநீம தொண்டர்கள் திமுகவுக்கு ஆதரவு அளித்து வேலை செய்வார்கள். மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், தமிழம் முழுவதும் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வேன் என தெரிவித்தார்.

Read More – ஜாபர் சாதிக் கைது.! போதை பொருள் கடத்தல்.. திரை, அரசியல் பிரபலங்களுக்கு தொடர்பா.?

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது, தேர்தல் போட்டியிட்ட நேரத்தில் கூட மக்களை அணுக முடியாத நபராகத்தான், வேட்பாளராகத்தான் கமல்ஹாசன் இருந்தார். அதற்கான சரியான பதிலை கோவை தெற்கு தொகுதி மக்கள் அளித்தார்கள்.

கோவையில் மூக்கு உடைச்சிருந்தாலும் நான் திரும்பி வருவேன் என்று கூறி வந்தார். நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால்,  வராதது எங்களுக்கு ஏமாற்றம்தான் என வானதி சீனிவாசன் கேலி செய்தார். மக்களை சந்திப்பதற்கு கமலுக்கு முகம் இல்லை. அதனால் தான் திமுகவுடன் இணைந்து ராஜ்யசபா சீட்டை பெற்று, தேர்தலில் போட்டியில்லை எனவும் தெரிவித்துள்ளார். மக்களை அணுக முடியாத சூழலில், எப்படியாவது ஒரு எம்பி அல்லது ஒரு எம்எல்ஏ என்ற பெயரில் தான் ஒரு ராஜ்யசபா சீட் கேட்கப்பட்டுள்ளது எனவும் விமர்சித்தார்.

Read More – த.வெ.கவில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு… விஜயின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

மேலும் வானதி சீனிவாசன் கூறியதாவது, தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர போறேன், நான் ஒரு முதலமைச்சர் மெட்ரியல் என கூறி வந்த கமல்ஹாசன், இந்த குறைந்தகால அரசியல் பயணத்தில் எந்த கட்சியை குறித்து ஊழல், வாரிசு என விமர்சனம் செய்தாரோ, அந்த கட்சியில் தான் தற்போது கூட்டணி அமைத்துள்ளார்.

வேட்பாளராக நின்று மக்களிடம் பேச முடியாத நீங்கள் பிரச்சாரத்துக்கு மட்டும் வந்த என்ன செய்ய போறீங்க, அந்த கூட்டணி என பிரயோஜனம் இருக்கு என கேட்ட வானதி சீனிவாசன், அரசியல் ஆசைக்காக ராஜ்யசபா பதவி வாங்கி உள்ள கமல்ஹாசன் ஒரு நட்சத்திர பேச்சாளர், அதனால் அவருக்கு என்ன வேலை என்றால் ராஜ்யசபா வேலை எனவும் விமர்சித்தார். மேலும், மக்களை சந்திக்க கமல்ஹாசனுக்கு பயம், தயக்கம் இருந்திருக்கலாம், இதன்மூலம் தற்போது அவரது அரசியல் சாயம் என்பது வெளுத்துவிட்டது எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment