காதலர் தினத்தை சாக்லேட் ஐஸ்க்ரீமுடன் ஜமாய்த்திடுவோம்…!

13

காதலர் தினம் என்றாலே மிக முக்கியமான இடத்தை பிடிப்பது இந்த ஐஸ்க்ரீம் தான். அதிலும் சாக்லேட் ஐஸ்க்ரீம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.

இப்போது சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பால் – 1 லிட்டர்
  • கோகோ பவுடர் – 8 ஸ்பூன்
  •  சாக்லேட் எசன்ஸ் – 5 ஸ்பூன்
  • சர்க்கரை பவுடர் – 100 கிராம்
  • ஜெலட்டின் பவுடர் – 1 ஸ்பூன்

செய்முறை

சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பாலை சூடாக்கி, அதில் கோகோ பவுடரையும், எசன்ஸையும் சேர்த்து நன்றாகக் கலக்கி கொதிக்க வைக்க வேண்டும். பிறகு சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து பிரிட் ஜில் ப்ரீஸரில் வைத்து கெட்டி படுத்த வேண்டும். இப்போது சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்.