சுவையான சாக்லேட் செய்வது எப்படி….?

18

காதலர் தினத்தை எப்போதும் இனிப்பான உணவு பொருட்களை வைத்து தான் கொண்டாடுவது உண்டு. இப்போது சுவையான சாக்லேட் செய்வது எப்படி என்று பாப்போம்.

தேவையான பொருட்கள்

  • கோகோ பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்
  • பால் பவுடர் – கால் கப்
  • சர்க்கரை – கால் கப்
  • வெண்ணிலா எசன்ஸ் – கல் டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

கடாயில் சர்க்கரையை போட்டு, தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு காய்ச்சி ஒரு கம்பி பதம் அளவுக்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை பாகில் பால் பவுடரை சலித்து, கட்டி படாமல் போடா வேண்டும். பின் கோகோ பவுடரையும் சலித்து கட்டிப்படாமல் போடா வேண்டும். பின் வெண்ணிலா எசன்ஸை சேர்த்து சற்று நேரம் கிண்ட வேண்டும். அதன் பின் மோல்டில் போட்டு குளிரூட்டி கட்டியான பிறகு எடுத்து சாப்பிட வேண்டும். இப்போது சுவையான சாக்லேட் தயார்.