ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி! ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும், தனது மகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் விரைவில், ரஷ்யாவிடம் இருந்து தடுப்பூசிகள் வாங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தடுப்பூசியை 2,000 பேருக்கு பரிசோதனை செய்து முடித்துள்ள நிலையில், ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.