மண்ணில் புதைந்த மக்களையும் விரைந்து காப்பாற்றுங்கள் – கேரள அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

மண்ணில் புதைந்த மக்களையும் விரைந்து காப்பாற்றுங்கள் – கேரள அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

விமான விபத்தை சிறப்பாக கையாண்ட கேரள அரசு, நிலச்சரிவில் சிக்கிய மக்களையும் விரைந்து காப்பாற்றுங்கள் என கவிஞர் வைரமுத்து அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்த இந்திய மக்கள் தாயகம் திரும்புவதற்கு முடியாத சூழ்நிலையில் இருந்தபோது, வந்தே பாரத் எனும் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு கொண்டிருந்தனர். இதில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து 10 குழந்தைகள் உட்பட 185 இந்தியர்களுடன் கூடிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்த போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தால் விமானம் இரண்டாகப் பிளந்து பேரிழப்பு ஏற்பட்டது.

இதில் 2 விமானிகள் உள்பட 197 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விமானம் விபத்தில் சிக்கி இறந்தவர்களை மீட்டு, விபத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் பெட்டி மூடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு மண்சரிவு ஏற்பட்டது. அங்கு வாசித்த 85 க்கு மேற்பட்ட குடிசைகள் நிலச்சரிவில் புதையுண்டது. இதில் 26 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு வேலை செய்து வந்தவர்கள் எத்தனை பேர் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் முழுமையாக பணிகள் முடிவடையவில்லை.

இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, விமான விபத்தை திறமையாக கையாண்டு முடித்துள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் அரசாட்சி பாராட்டுக்குரியது. அதேபோல தேயிலை தோட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்த மக்களையும் விரைந்து மீட்டு தகுந்த பாதுகாப்பும் வழங்க வேண்டும் என கேரள அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கவிதை ஒன்று எழுதியுள்ளார். “வான் வழி வந்தோர் மேன் மக்கள் அல்லர், மன்வழி சென்றோர் கீழ் மக்கள் அல்லர் என்பது பொது உடமை, இது பூமிக்கு புரியாதா என்ன? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இதோ அவரது பதிவு,

author avatar
Rebekal
Join our channel google news Youtube