அமெரிக்க அதிபர் தேர்தல்…மேலும் ஒரு வேட்பாளர் விலகல்…!

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடன்  அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில்  மீண்டும் போட்டியிடுகிறார். அதே நேரத்தில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.

குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப்,  இந்திய வம்சாவளியை சேர்ந்த தெற்கு கரோலினா முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலி மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர். குடியரசு கட்சி சார்பில் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததால் அதிபர் போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்தார்.

இதற்கிடையில் கடந்த வாரம் அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் 51% , புளோரிடா ஆளுநர் ரோன் டி சான்டிஸ் 20% , அதே நேரத்தில் நிக்கி ஹாலி 19% பிடித்து இருந்தனர். இந்த நிலையில் ரோன் டி சான்டிஸ் தனது  பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்வதாகவும், டிரம்புக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது ட்ரம்புக்கும், நிக்கி ஹாலி இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. நியூஹாம்ஷை மாகாணத்தில்  தேர்தலில் கூட டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் இந்த தேர்தலில் மீண்டும் போட்டி அதிபர் ஜோ பைடன் ,  டிரம்ப் இடையே நடக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

author avatar
murugan