ஜெயிலர் 2-வில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்னா மேனன், விநாயகன், தமன்னா பாட்டியா, மோகன்லால், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது.

படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வருகிறது. இயக்குனர் நெல்சனும் ஜெயிலர் படத்தின் முதல் பாகம் வெளியான சமயத்தில் ஜெயிலர் 2-வின் ஐடியா இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இருப்பினும் படம் எப்போது தொடங்கும் என்பதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளி வரவில்லை, இருந்தாலும் ஜெயிலர் 2 விரைவில் எடுக்கப்படவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது ஜெயிலர் -2வில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அயோத்தியில் நான் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம் – ரஜினிகாந்த் பேட்டி!

அதன்படி, ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, ரஜினிக்கு ஜோடியாக தர்பார், சந்திரமுகி,  அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதைப்போல, நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார்.

எனவே, ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.