#BREAKING: நகர்ப்புற தேர்தல் – வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றதையடுத்து,தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில்,  சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மொத்த வாக்காளர்கள் 40,54,038 உள்ளனர். ஆண்கள் 19,92,198 பேர், பெண்கள் 20,60,767 பேர், திருநங்கைகள் 1073 பேர். சென்னையில் குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக 1,76,679 பேருடன் துறைமுகம் தொகுதி உள்ளது. சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக 3,15,502 பேருடன் வேளச்சேரி தொகுதி உள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 13, 14, 27, 28 தேதிகளில் வாக்கு மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மூலம் வாக்காளர்கள் பட்டியலில் பொதுமக்கள் திருத்தம் மேற்கொள்ளலாம்.

இப்பட்டியலில் 22,492 வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 25,515 வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

GO

author avatar
murugan