மதுரை எய்ம்ஸ்… கோவை நூலகம்.! சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய முக்கிய தேதி.!

இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசி நாளில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். பட்ஜெட் மீதான விவாதம், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்  , அதிமுக வெளிநடப்பு என பரபரப்பாக இன்றைய சட்டப்பேரவை நடைபெற்றது.

அப்போது நேற்றைய கூட்டத்தொடரில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், கோவையில் நூலகம் அமையும் என தமிழக அரசு அறிவித்தது. அது எப்போது தொடங்கப்படும்.? எங்கு அமைக்கப்பட உள்ளது. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட உள்ளது , பணிகள் எப்போது துவங்கும் என கேட்டு இருந்தார்.

வானதி சீனிவாசன் கேள்வியை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கூறினார். அவர் கூறுகையில், வானதி சீனிவாசன் கேள்விக்கு நேற்று துறை அமைச்சர் பதில் அளிக்க விட்டுவிட்டார். அதற்கு நான் பதில் கூறுகிறேன். மதுரை எய்ம்ஸ் போல அல்லாமல், குறிப்பிட்ட தினத்தில் கோவை நூலகம் கட்டி முடிக்கப்படும். இந்த ஆட்சியில் சொன்னதை தான் செய்வோம் என குறிப்பிட்டார்.

மேகதாது விவகாரம்… ஒரு செங்கல் கூட வைக்க முடியாது.! இபிஎஸ் தீர்மானம் மீது துரைமுருகன் பதில்.!

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டிமுடிக்கப்பட்டது போல, சென்னையில் கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது போல, அலங்காநல்லூரில் பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்தது போல, இன்னும் சில தினங்களில் மெரினாவில் கலைஞர் நினைவிடம் அமைத்தது போல கோவை நூலகம் குறிப்பிட்ட தினத்தில் கட்டி முடிக்கப்படும்.

ஒன்று மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். மத்திய அரசு எய்ம்ஸ் அறிவித்தது போல அல்லாமல் , குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு 2026 ஜனவரியில் கோவை நூலகம் திறக்கட்டும். அதற்கு முறையாக உங்களுக்கு அழைப்பு வரும். நீங்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment