5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடக்கம்!

madurai aiims

Madurai AIIMS : 5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது மத்திய அரசு. கடந்த 2018ம் ஆண்டு மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்பின், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். Read More – … Read more

மதுரை எய்ம்ஸ்… கோவை நூலகம்.! சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய முக்கிய தேதி.!

CM MK Stalin speech in TNBudget2024

இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசி நாளில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். பட்ஜெட் மீதான விவாதம், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்  , அதிமுக வெளிநடப்பு என பரபரப்பாக இன்றைய சட்டப்பேரவை நடைபெற்றது. அப்போது நேற்றைய கூட்டத்தொடரில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், கோவையில் நூலகம் அமையும் என தமிழக அரசு அறிவித்தது. அது எப்போது தொடங்கப்படும்.? எங்கு அமைக்கப்பட உள்ளது. … Read more

மதுரை எய்ம்ஸ் – சுற்றுச்சுழல் அனுமதி கோரி விண்ணப்பம்!

EIAClearance

மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு சுற்றுச்சுழல் அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுச்சுழல் அனுமதிகோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல் மதுரை மாவட்டம், தோப்பூரில் … Read more

எங்கள் எய்ம்ஸ் எங்கே? செங்கல் நட்டு 5 ஆண்டுகள் நிறைவு – சு.வெங்கடேசன் எம்பி

Su Venkatesan MP

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக பொதுமக்கள் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, பல ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் … Read more

மதுரை எய்ம்ஸ் விவகாரம்.! இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி தரவில்லை.! வெளியான புதிய தகவல்.!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டிமுடிக்கப்படும் என்கிற கேள்வி பலரது மனதில் இங்கு எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் கூட அதற்கான விளக்கத்தை மத்திய அரசிடம் நீதிபதிகள் கேட்டுள்ளனர். அவர்களும் தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல … Read more

2026க்குள் மதுரை எய்ம்ஸ் எப்படி கட்டி முடிக்கப்படும்.? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

2026 அக்டோபர் மாதத்திற்குள் எப்படி எய்ம்ஸ் கட்டிடத்தை கட்டி முடிப்பீர்கள் என விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். – மதுரை உயர்நீதிமன்றம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டிமுடிக்க உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த கேகே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான பணிகள் நடைபெறுவதாக பதில் கூறியிருந்தனர். ஆனால், இதனை … Read more

மதுரை எய்ம்ஸ் தலைவராக நாகராஜன் வெங்கடராமன் நியமனம்…!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நாகராஜன் வெங்கடராமனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நாகராஜன் வெங்கடராமன் அவர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. தற்போது தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி குழு தலைவராக உள்ள நிலையில், தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எய்ம்ஸ் குறித்த தவறான கருத்து.! பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மீது காவல் நிலையத்தில் புகார்.!

மதுரை எய்ம்ஸ் பற்றி தவறான கருத்து கூறிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் மதுரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் தமிழகம் வந்திருந்தார். அப்போது மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில்  பேசுகையில், ‘ மதுரை எய்ம்ஸ் கட்டடத்தின் 95 சதவீத பணிகள் நிறைவடைந்தது.’ என கூறினார். பாஜக தலைவரின் இந்த கூற்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. … Read more

ஜே.பி.நட்டா ஏன் இதோடு நிறுத்தினார்..? இதையும் சொல்லியிருக்கலாமே? – ப.சிதம்பரம்

பூர்த்தியான எய்ம்ஸ் மருத்துவமனை பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே? என ப.சிதம்பரம் ட்வீட்.  பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார். ஜே.பி.நட்டாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் … Read more

#Breaking:மதுரை எய்ம்ஸ் – ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு!

மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு, மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில்,கடந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் மிக கடுமையாக எதிரொலித்தது.குறிப்பாக,தற்போதய சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மதுரை எய்ம்ஸ் … Read more