தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. கடந்த 15 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார்.

இதையடுத்து தமிழக நிதிநிலை அறிக்கை ’தடைகளைத் தாண்டி’ என்ற தலைப்பில் கடந்த 19 ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி சட்டபேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது. இந்த வேளாண் பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார்.

மேகதாது விவகாரம்: அதிமுக வெளிநடப்பு..!

இந்த நிலையில் பட்ஜெட் மீதான இறுதி நாள் விவாதம் இன்று நடைபெற்ற நிலையில் அமைச்சர்கள் அதன் மீதான கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.

Leave a Comment