ஜனாதிபதியை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் நிதியமைச்சராக ஆறாவது பட்ஜெட்டாகவும், மோடி அரசின் 2-வது ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாகவும் இது இருக்கும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்கும் வரை நாட்டின் நிதி தேவையை இடைக்கால பட்ஜெட் பூர்த்தி செய்யும். புதிய அரசு அமைந்த பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்நிலையில், இன்று காலை 8.15 மணிக்கு, நிதியமைச்சர் முதலில் 2024 பட்ஜெட் தயாரிக்கும் குழுவுடன் புகைப்பட அமர்வில் கலந்துகொண்டார். பின்னர் நிதியமைச்சர் ஜனாதிபதியைச் சந்தித்து பட்ஜெட்  திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றார்.

இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மாநில அமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் கரட் மற்றும் பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

இதைத்தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் சென்றார். அங்கு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இன்றைய பட்ஜெட்டில் ஏழைகள் மற்றும் பெண்களுக்கு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024 அறிவித்த பிறகு, அது தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆன்லைனில் , www.indiabudget.gov.in என்ற யூனியன் பட்ஜெட் இணையதளத்தில் இருந்தும் பட்ஜெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் கிடைக்கும்.

author avatar
murugan

Leave a Comment