பிரதமர் மோடி தலைமையில் மதியம் 1 மணிக்கு மத்தியமைச்சரவை கூட்டம்..!

பாராளுமன்ற வளாகத்தில் இன்று மதியம் 1 மணிக்கு மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 

டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், விவாதங்களின்றி வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநிலங்களவை மாண்பை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு  நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்று மதியம் 1 மணிக்கு மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.