#Breaking:அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!

#Breaking:அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!

சென்னை:அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில்,தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இல்லாமல் முதல் முறையாக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில்,இதனால்,புதிய அவைத்தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

அதேசமயம்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்,உட்கட்சி தேர்தல் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,ஒருங்கிணைப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு பிறகு யாரும் தேர்வு செய்யப்படாத காரணத்தால் அப்பதவி காலியாக உள்ளதையடுத்து, அதிமுகவின் தற்காலிக தலைவராக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து,அவருக்கு ஓபிஎஸ்,ஈபிஎஸ் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த தமிழ்மகன் உசேன் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியதிலிருந்தே கட்சியில் இருந்து வருகிறார்.அகில உலக எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும் இவர் இருந்து வந்துள்ளார். மேலும், கட்சியில் வக்ஃபு வாரிய தலைவர் பொறுப்பையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube