உக்ரைன் விவகாரம் – ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு…!

உக்ரைன் மீது கடந்த 24-ஆம் தேதி படையெடுப்பு நடத்திய ரஷ்ய படைகள், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டு,உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய நிலையில்,கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே, ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய நட்பு நாடான பெலாரஸில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ரஷ்ய அதிபர் புடினிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது உக்ரைன் அதிபரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் சுமி உள்ளிட்ட சில பகுதிகளில் போர்நிறுத்தம் செய்ததற்காக புதினுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, சுமி உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு தரப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.