ட்விட்டர் CEO பராக் அகர்வாலுக்கு பணிநீக்கத்திற்கு பின் இத்தனை கோடி வழங்கப்படுகிறதா…?

ட்விட்டர் CEO பராக் அகர்வாலுக்கு பணிநீக்கத்திற்கு பின் சுமார் 42 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.346 கோடி கிடைக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 

உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்  நேற்று ட்விட்டர் தலைமையகத்துக்குள் கைகழுவும் தொட்டியை ஏந்தியவாறு ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைந்தார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன், ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சில உயர் அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்தார்.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள பராக் அகர்வாலுக்கு சுமார் 42 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.346 கோடி கிடைக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment