தமிழகத்தில் காவல் அதிகாரிகள் இடமாற்றம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழக காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம், மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் மற்றும் கோவை காவல் கண்காணிப்பாளர் அருள் அரசையும் இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி ஜெயராம், தினகரனுக்கு பணியிடம் ஒதுக்கக்கூடாது என ஆணையிட்டுள்ளது.

மேலும், புதிதாக மேற்கு மண்டல ஐஜியாக அமல்ராய், மத்திய மண்டல ஐஜியாக தீபக் எம்.தாமோதர் மற்றும் கோவை காவல் கண்காணிப்பாளராக எஸ்.பி.யாக செல்வ நாகரத்தினம் ஆகியோரை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.