காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை ஆதரித்து வாக்கு சேகரிப்பு..!

ஸ்ரீபெரம்பத்தூர் தொகுதி வேட்பாளர் செல்வபெருந்தகை ஆதரித்து  தமிழக தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் அ.அமீர்கான் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் பம்பரம் போல சுழன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீபெரம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வபெருந்தகை  ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரித்த தமிழக தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் அ.அமீர்கான் மற்றும் தேர்தல் குழு உறுப்பினர் LXA.சார்த்தோ RTI துறை மாநில தலைவர் வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் J. சாதிக் அகமது மற்றும் RTI துறை ஒருங்கிணைப்பாளர் பர்மாபஜார் நாகூர்கனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.