கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல துணைவேந்தர்கள் கருத்தரங்கு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தமிழக ஆளுநர் தொடங்கி வைத்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிறப்போக்குதனமான கருத்துக்களை கல்வியில் புகுத்தி வருகிறது .

கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும் என்றும், மாநில கல்வி கொள்கை அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.