தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் டாப்ஸி….!!!

  • நடிகை டாப்ஸி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
  • இந்தி படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு படங்களை மட்டும் விட மாட்டேன்.

நடிகை டாப்ஸி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் `கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் கதாநாயகியாக அறிமுகமானது தென்னிந்திய மொழி படத்தில் தான். பெரிய ஹிட் படங்கள் அமையாமல் போனாலும் முதலில் கதாநாயகியாக அறிமுகம் கிடைத்தது இங்குதான்.

மேலும், அவர் கூறுகையில், எவ்வளவு இந்தி படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு படங்களை மட்டும் விட மாட்டேன். எனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து வைத்ததே தென்னிந்திய திரையுலகம் தான்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment