தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா கூட்டறிக்கை…!!

  • இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.
  • இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக கூட்டாக அறிக்கை விட்டனர்

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின்   பங்கேற்றுள்ள, 16வது முத்தரப்பு கூட்டம் சீனாவில் உள்ள வூசென் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார். மேலும் அவர் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை பற்றி விரிவாக பேசினார். பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 44 இந்திய வீரர்கள் பலியானதாக தெரிவித்தார்.

மேலும் சுஷ்மா சுராஜ் , எந்த நாடும் தீவிரவாதத்திற்கு ஒரு போதும் கருணை காட்டவே கூடாது . இந்தியா மீது மேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினர் திட்டதையடுத்து முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று சுஷ்மா விளக்கமளித்தார்.பாகிஸ்தானில் தீவிர வாத முகாம்கள் மீது  இந்தியா நடத்திய தாக்குதல் ராணுவ தாக்குதல் அல்ல ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தாமல் இருக்க எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கை என்று விளக்கி பேசினார.

இதையடுத்து  தீவிரவாதத்திற்கு எதிராக, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், எல்லைப் பிரச்சனையை தீர்க்க, தீவிரவாதத்தை பயன்படுத்தக் கூடாது . தீவிரவாத நடவடிக்கைக்கு  எதிரான அரசின் நடவடிக்கை முக்கியமானது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment