இன்று (பிப்..,09) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

17

இன்று (பிப்..,09) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று அருகில் உள்ளவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் நாள். வரவைக் காட்டிலும்இன்று செலவு கூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் வாங்கி மகிழ்வீர்கள்.இன்று வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்  ஒரு நாள்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்று யோகமான நாள். இன்று நீங்கள் யோசிக்காது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். இன்று தொலைபேசி வழி தகவல் உங்களின் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும்.மேலும் மாலை நேரம் ஒரு எதிர்பாராத தனலாபம் வந்து சேரலாம்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்று தொட்டகாரியம் வெற்றி பெறுகின்ற நாள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். மேலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற நீங்கள் இன்று கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். மேலும் வருமானம் திருப்தி தரும்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்று பொறுப்புகள் கூடும் நாள். அடுத்தவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று ஒரு மகிழ்ச்சியைத் தரும். உங்களின் தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் இன்று மாறும். வேலைப்பளு குறையும் மற்றும் பணப் பற்றாக்குறை நிவர்த்தியாகும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்று உங்களின் காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய ஒரு  நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் இன்று கிடைக்காது. விலை உயர்ந்த பொருட்களை நீங்கள் கவனமாக கையாளுவது தான் நல்லது. வீடு மாற்றம் முன்வருவீர்கள்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்று உங்களின் நிதி நிலை உயரும் ஒரு நாள். திருமண வாய்ப்புகள் இன்று கைகூடி வரும். தொழில் ரீதியாக உங்களுக்கு புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன் மற்றும்  மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்று உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும் நாள். பணி நிரந்தரம் பற்றிய தகவல் இன்று உண்டு. இன்று சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பெண் வழி பிரச்சினைகள் எல்லாம்  நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்திக்கு இன்று  வித்திடுவீர்கள்.

 

Image result for விருச்சகம் ராசி LOGO

விருச்சக ராசிக்காரர்கள் இன்று தங்களின்  நட்புவட்டம் விரிவடையும் ஒரு நாள்.இன்று உங்களின் வருமானம் இருமடங்காகும். வாழ்க்கைத் தேவைகளை எல்லாம் இன்று  பூர்த்தி செய்து கொள்வீர்கள்.மேலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற உங்களுக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். இன்று வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று வளர்ச்சி கூடும் ஒரு நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில்  வெற்றி கிடைக்கும். வெளியுலகத் தொடர்புகள் இன்று விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல் ஒன்று இன்று வந்து சேரும். அரசியல்வாதிகளால் உங்களுக்கு அனுகூலம் ஏற்படும்

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்று வெற்றிச் செய்திகள் எல்லாம் வீடு வந்து சேரும் ஒரு நாள்.உங்கள் இடத்தில்  ஏட்டிக்கு போட்டியாக நடந்தவர்கள் இன்று இணக்கமாக நடந்து கொள்வர். மேலும்  உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு இன்று உண்டு. குடும்பத்தில் இருந்த குழப்பமான நிலை எல்லாம்  மாறும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

Related image

இன்று நீங்கள்  உங்களின் சொல்லை செயலாக்கி காட்டும் ஒரு நாள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம்  இன்று விரிவடையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆடை மற்றும் ஆபரணம் வாங்கி மகிழும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் விவாக பேச்சுக்கள்  எல்லாம் நல்ல முறையில் முடிவாகலாம்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்று  மக்கள் செல்வங்களால் உங்களின்  மகிழ்ச்சி  கூடும் ஒரு நாள்.தங்களின்  ஆரோக்கியம் சீராக இன்று ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. மேலும் தங்களின் முன்கோபத்தை தவிர்ப்பது மிக நல்லது.இன்று திடீர் பயணமொன்றால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும்.