வரலாற்றில் இன்று (07-12-2019) : முப்படை வீரர்களுக்கான கொடி நாள்!

  • முப்படை வீரர்களுக்கான தேசிய கொடி நாள் 
  • துக்ளக் பத்திரிக்கை நிறுவனம் சோ ராமசாமி மறைந்த நாள் 

டிசம்பர் 7 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. 1949ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நமது முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களுக்கு அனைவரும் உதவும் வகையில்  நிதி வசூல் செய்து முப்படை வீரர்களின் குடும்ப நலனுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் நலனுக்கு உதவும் வகையிலும் அந்த பணம் பயன்படுத்தப்படும்.

இதே டிசம்பரில் தமிழக அரசியலில் முக்கிய பிரமுகரான சோ.ராமசாமி பிறந்தநாள். இவர் 1934ஆம் ஆண்டு அக்டோபர் 5இல் பிறந்து தனது 82வது வயதில் 2016ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார். இவர் 1970இல் துக்ளக் எனும் பத்திரிகையை நிறுவினார். அரசியல் நையாண்டி கலந்து எழுதப்பட்ட இந்த பத்திரிக்கை மக்களிடையே மிக பிரபலம்.

இதே நாளில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி , நடிகைகள் வாணி போஜன், சுரபி ஆகியோர் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.