வரலாற்றில் இன்று(28.03.2022) வேதாத்திரி மகரிஷி மறைந்த தினம்..!

அனைவரிடமும் அன்புசெலுத்தும் ஒருவர் என்ற ஒரு சிறந்த மனிதராக இருந்த வேதாத்திரி மகரிஷி மறைந்த தினம் இன்று. இவர், கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பன்,  முருகம்மாள் என்ற சின்னம்மாள் என்ற தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும், பக்தி கீர்த்தனைகளையும் கற்றுக் கொண்டார். இவரது குடும்பச்சூழலில் இவருக்கு படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே,  தன்னுடைய சொந்த ஊரில் … Read more

வரலாற்றில் இன்று(14.03.2022)..!பொதுவுடைமை சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் மறைந்த தினம் இன்று..!

கார்ல் மார்க்ஸ், ஐரோப்பா கண்டத்தின்  ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் என்னும் நகரில் 1818 மே மாதம் 5ஆம் நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர் ஆவர். கார்ல் மார்க்ஸ் இவருக்கு மூன்றாவது மகனாவார். 1830 வரை இவருக்கு தனிப்பட்ட முறையில் தான் கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் … Read more

வரலாற்றில் இன்று(25.02.2022)..!பிரபல கர்நாடக இசை கலைமாமணி மறைந்த தினம்..!

கர்நாடக இசையில் மெய்மறக்க வைக்கும் சுகுணா புருசோத்தமன் அவர்கள் தமிழகத்தின் சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆரம்ப கால கர்நாடக இசையை, முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், திண்ணையம் வெங்கடராம ஐயர், பி.சாம்பமூர்த்தி ஆகியோரிடம் கற்றார். மேலும் இவர், லலிதாபாய் சாமண்ணாவிடம் வீணை வாசிப்பையும் கற்றுக்கொண்டார். பின் இவர், அனைத்திந்திய வானொலி, தூர்தர்சனில் உயர்தரக் கலைஞராக பணியாற்றினார். இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் மேடைக் கச்சேரிகள் செய்து தனது கர்நாடக இசயை … Read more

வரலாற்றில் இன்று(06.05.2020)…. மண்ணுலகம் காக்க நரசிம்மர் அவதாரமாக பரம்பொருள் அவதரித்த தினம் இன்று…

இந்து சமய மார்க்கத்தில் பல எண்ணற்ற தெய்வங்களை கொண்டிருந்தாலும்  அன்பு மற்றும் எல்லா இடத்திலும், எல்லோரிடத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதையே அனைத்து  தெய்வங்களும்  உணர்த்துவதாக இருக்கிறது. அப்படி இறைவனை முழுமையாக நம்பி, அவனை நம்பினால் கை விடமாட்டார் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது தான் இந்த நரசிம்ம அவதாரம். காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே அவருக்கே மிகவும் பிடித்த அவதாரம் என்றால் அது நரசிம்ம அவதாரம் தான். இந்தாண்டு  மே மாதம் 06ம் தேதி … Read more

வரலாற்றில் இன்று(08.04.2020)…. வந்தே மாதரம் என்ற சொல்லை உருவாக்கிய தேச பற்றாளர் மறைந்த் தினம்…

வங்கப் பிரிவினையை எதிர்த்து இந்தியாவில் உள்ள  இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எழுப்பிய வலிமை வாய்ந்த போர் முழக்கமாகவே (யுத்த கோஷ மாகவே) அந்த மந்திரம் இருந்தது. அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் குரல் என்றே சொல்லலாம். அந்த மந்திர சொல் ”வந்தே மாதரம்” என்பது ஆகும். இந்த வந்தே மாதரம் உருவான வரலாறு குறித்து பார்க்க இருக்கிறோம். ஒருமுறை  கொல்கத்தாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு 1875ஆம் ஆண்டு ஓர் இளைஞன் இரயில் பயணம் மேற்கொள்ளுகிறான். ஓடும் … Read more

வரலாற்றில் இன்று(05.04.2020)…. கல்வி வள்ளல் அழகப்பா செட்டியார் மறைந்த தினம் இன்று….

சிவகங்கை மாவட்டம் , காரைக்குடிக்கு  அருகில் உள்ள கோட்டையூரில்  பிறந்த மகான் என்றும் காரைக்குடியின் கல்வி கடவுள், பல அறிஞர்களை உருவாக்கிய ஆசான் , கல்வி தந்தை எனபோற்றப்படுபவர் அழகப்பா செட்டியார் ஆவர். இவர், காரைக்குடியின் கோட்டையூரில் ஏப்ரல் மதம்  06ஆம் நாள்  1909ஆம் ஆஅண்டு  பிறந்தார், இவரது குடும்பம் மிகவும் பாரம்பரியமான நாட்டுகோட்டை நகரத்தார் சமுதாயம் , அவரது பள்ளி படிப்பு காரைக்குடியில் அமைந்து உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் மேல் நிலை பள்ளியில் தொடக்க … Read more

வரலாற்றில் இன்று(05.01.2020)…உலக பறவைகள் தினம்…

வரலாற்றில் இன்று(05.01.2020)…உலக பறவைகள் தினம் இன்று உலக மக்கள் அனைவராலும் பறவைகள் தினம் கொண்டாடப் படுகிறது. மனிதர்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளால் அழிந்து வருகின்ற பறவைகளின் இனங்களை பாதுகாக்கக் கூடிய நோக்கத்தோடு ஆண்டுத் தோறும் ஜனவரி 5 ஆம் தேதி உலக பறவைகள் தினம் ஆக கொண்டாடப்படுகிறது. இயற்கை வளம் மற்றும் காடுகளை அழித்தல் மேலும்  இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடு படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் பறவை இனங்கள் அழிக்கப்பட்டு வருகின்ற அவலநிலை நிகழ்கிறது. இது மட்டுமல்லாமல் … Read more

வரலாற்றில் இன்று ( 14-12-2019) : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிடிபட்ட நாள்!

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், அமெரிக்க ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று.  ராணா டகுபதி, ஆதி, சமீரா ரெட்டி ஆகியோர் பிறந்ததினம் இன்று.  ஈராக் நாட்டின் முன்னாள் பிரதமர் சதாம் உசேன் அமெரிக்க ராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று. இவரது ஆட்சி காலத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடந்ததாக கூறி இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ஈராக் போரினை அடுத்து இவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் தலைமறைவாக … Read more

வரலாற்றில் இன்று (10.12.2019) : சர்வதேச மனித உரிமைகள் தினம்!

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பானது இந்த நாளில் உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை குறித்த பிரகடனத்தை அமல்படுத்தியது. அந்த நாளை குறிக்கும் வகையில் தான் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. 1948 டிசம்பர் 10 இதனை பிரகடனப்படுத்தினாலும், சில தன்னார்வ அமைப்புகள் கூறியதன் பெயரில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1950ஆம் ஆண்டு முதல் ஐநா-வானது உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வுரிமை பிரகடனப்படுத்திய … Read more

வரலாற்றில் இன்று (07-12-2019) : முப்படை வீரர்களுக்கான கொடி நாள்!

முப்படை வீரர்களுக்கான தேசிய கொடி நாள்  துக்ளக் பத்திரிக்கை நிறுவனம் சோ ராமசாமி மறைந்த நாள்  டிசம்பர் 7 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. 1949ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நமது முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களுக்கு அனைவரும் உதவும் வகையில்  நிதி வசூல் செய்து முப்படை வீரர்களின் குடும்ப நலனுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் நலனுக்கு … Read more