ராக்ஸ்டார் அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.!

இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ படத்தில் இருந்து முதல் பாடல் எப்போது வெளியாகும் என அறிவிப்பு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

டாக்டர் படத்தில் அதிரி புதிரி ஹிட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உச்சத்தை தொட்டுள்ளது. அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை குறைய விடாமல் அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுத்து கொடுத்து ரசிகர்களை எதிர்நோக்கி காத்திருக்க வைத்திருக்கிறது படக்குழு.

சிவகார்த்திகேயன் அடுத்து டான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி கலாட்டா கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி எனும் அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்து உள்ளனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததற்கான அப்டேட் வெளியானது. அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், அடுத்து ஃபர்ஸ்ட் சிங்கிள் (முதல் பாடல்) குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு டான் முதல் பாடல் எப்போது வெளியாகும் என அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.