,

நெல்லை மக்கள் கவனத்திற்கு…! இந்த மூன்று இடங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்..!

By

திருநெல்வேலி மாவட்டம், 3 வட்டங்களில் இன்று அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெறவுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் வட்டம், சித்தார்சத்திரம் கிராமத்திற்கு அங்குள்ள சமுதாய நலக்கூடத்திலும், பாளையங்கோட்டை வட்டம், மணப்படை வீடு கிராமத்திற்கு அங்குள்ள ஊராட்சி சேவை மைய கட்டடத்திலும், நான்குனேரி வட்டம், காடன்குளம் திருமலாபுரம் கிராமத்திற்கு அங்குள்ள இ-சேவை மையத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் இன்று நடைபெறும்.

இந்த முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை தேவைகள் தொடர்பாக மக்கள் மனு அளித்து, தங்களது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்.