ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

TN Govt : பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை  உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், மீண்டும் அவருக்கு எம்எல்ஏ பதவி மற்றும் அமைச்சர் பதவி கிடைக்கும் சூழலில் உருவாகியுள்ளது.

Read More – பொன்முடிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது: ஆளுநர் ரவி மறுப்பு

அந்தவகையில், பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு ஆளுநர் ஆர்என் ரவி மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பினார். அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் சிறைத் தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, நிரபராதி என நீதிமன்றம் கூறவில்லை.

Read More – அண்ணாச்சி கூட்டணி என்னாச்சி.? பாமகவை விட்டு பிடித்த அதிமுக.!

எனவே, குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கிறதே தவிர, அவர் விடுவிக்கப்படவில்லை. ஆகவே, அவரை அமைச்சராக்குவது சரியாக இருக்காது என கூறப்பட்டது. இந்த விவகாரம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Read More – SBI-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை… மீண்டும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் முயற்சிக்கிறார். எனவே, பொன்முடியை அமைச்சராக நியமிக்கவும், அமைச்சர்கள் சிலரின் துறைகள் மாற்றத்துக்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் தர உத்தரவிடக்கோரி தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி, இந்த வழக்கை உடனடியாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment