• திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று நடைபெற்றது.
  • மூன்றாம் நாளான நேற்று திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் தங்க பல்லக்கில் வீதிஉலா வந்தார்.இந்த  நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற்றார்கள்.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர்  நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில்  ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. இந்நிலையில் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருடம் தோறும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியின் அருளை பெறுகிறார்கள்.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் தங்க பல்லக்கில் வீதிஉலா வந்தார்.இந்த  நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற்றார்கள்.

அதற்கு  பிறகு மாலை 5.00 மணிக்கு பெருமாள்  வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார்.அதனை தொடர்ந்து அனுமந்த வாகனத்தில் வீதிஉலா நடந்தது.நாளை இரவு பெருமாள் கருட சேவையில் அருள்பாலிக்கும் முக்கிய நிகழ்வு நடைபெற இருக்கிறது.

 

.