• விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.
  • அதற்கடுத்து சிந்துபாத் திரைப்படம் வெளியாக உள்ளது.
  • ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய்  சந்தர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தாக சூப்பர் டீலக்ஸ் படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பெண் வேடமிட்டு நடித்து வருகிறார். இதில் பகத் பாசில், சமந்தா என பலர் நடித்து வருகின்றனர். அதனை அடுத்து ‘சேதுபதி’ பட இயக்குனர் சு.அருண் குமார் இயக்கத்தில் சிந்துபாத் படத்தில்  நடித்து முடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ‘ஸ்கெட்ச்’ பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷிகண்ணா , நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதற்காக தனது லுக்கை மாற்றியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

DINASUVADU