• 50 ஓவர் தொடருக்கான உலகக்கோப்பை போட்டிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது
  • இந்த முறை உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்க உள்ளது

2019 உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜே.பி டுமினி அறிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்க அணியில் சரியான இடம் இல்லாமல் தவித்து வரும் அவருக்கு தற்போது 34 வயதாகிறது. இந்நிலையில் தற்போது உலக கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தற்போது வரை 193 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.