ஐபிஎல்-னா அழுத்தம் இருக்கும் ஆனா அவர்… வெற்றிக்கு பிறகு பேட் கம்மின்ஸ் புகழாரம்.!

Pat Cummins: அபிஷேக் சர்மா ஈர்க்கக்கூடியவர், உண்மையில் அவர் ஐபிஎலில் கூலாக விளையாடுகிறார் என பேட் கம்மின்ஸ் புகழ்ந்து பேசினார்.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது .

17ஆவது ஐபிஎல் தொடரின் 8ஆவது போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி அதிரடியாக ஆடி 277 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 278 ரன்கள் என்ற இலக்கை துரத்தியமும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.

மும்பை அணியை தோற்கடித்து ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின் வெற்றி குறித்து பேசிய ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், “அபிஷேக் சர்மா அவரது விளையாட்டால் கவரக்கூடியவர், உண்மையில் இது சுவாரசியமாக இருக்கிறது.

ஐபிஎல்லில் ஒரு பேட்ஸ்மேன் அதிக அழுத்தத்துடன் விளையாடுவார்கள், ஆனால் அவர் மிக கூலாக விளையாடுகிறார் என அவரை புகழ்ந்து பேசினார். இது வேடிக்கையாக இருக்கிறது, இல்லையா? இந்தப் போட்டியில் வந்து வருடத்தில் இல்லாமல் சிக்ஸர் பவுண்டரிகள் மூலம் சுற்றிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் இந்த போட்டியை நன்றாக விளையாடி முடிதுள்ளோம்.

இது ஒரு நல்ல பேட்டிங் பிட்ச்சாக இருந்தது, எனவே அதை சாதகப்படுத்தி சில ரன்களை எடுத்தோம். மேலும், பவுலிங்கிலும் தெளிவான திட்டங்களைக் கொண்டிருந்தோம் அதுதான் வெற்றியின் முக்கிய காரணமாகவும் அமைந்தது எனக் கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.