இந்தியாவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்.! – நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி தகவல்.!

நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்  நிலவி வருகிறது.’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். ஐந்து நாள் பயணமாக அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சு வார்த்தை, அடுத்ததாக, ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் “இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு”என்ற தலைப்பில் பேசிய நிர்மலா சீதாராமன் பல்வேறு அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டார்.

அதில் , ‘ இந்திய பொருளாதாரமானது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. எரிபொருள், மின்சாரம், விவசாய உரத்தின் விலை கடும்  உயர்வு பெற்றுள்ளது. மேலும், அவை கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு உள்ளது. ‘ என்று குறிப்பிட்ட  மத்திய அமைச்சர்,

அடுத்ததாக, ஓர் திடுக்கிடும் தகவலை கூறினார். அதாவது, ‘ நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்  நிலவி வருகிறது.’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment