#BREAKING: அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் வருமான வரி சோதனை!

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை.

புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பாண்டித்துரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றவர் பாண்டித்துரை. நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை பெற்று பல்வேறு முறைகேடு செய்ததாக பாண்டித்துரை மீது புகார் எழுந்ததை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment