68 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா! யார் தெரியுமா?

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பெரிய ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக லியோ, அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி என கலக்கி வருகிறார். இதில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதைப்போல மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள தக்லைஃப் படத்திலும் கூட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் கலக்கி கொண்டு இருக்கும் த்ரிஷாவுக்கு தற்போது பாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு சோதனையா? வேதனையில் ஹாரிஸ் ஜெயராஜ்!

அந்த தகவலை தொடர்ந்து தற்போது 68 வயதாகும் பிரபல நடிகரான சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க த்ரிஷா கமிட் ஆகி இருக்கிறாராம். இவர்கள் இருவரும் இணையவுள்ள இந்த திரைப்படத்தை இதற்கு முன்பு பிம்பிசாரா எனும் திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான மல்லிதி வசிஷ்டா  தான் இயக்கவுள்ளாராம்.

இந்த திரைப்படம் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 157-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிமாக “Mega157” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதால் தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு கிடைக்கவேண்டும் என்ற காரணத்தால் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் நடித்தால் சரியாக இருக்கும் என்ற காரணத்தால் அவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நடிகை த்ரிஷா இந்த படத்திற்கு முன்பே கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீயுடன் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.