பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு சோதனையா? வேதனையில் ஹாரிஸ் ஜெயராஜ்!

பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு சோதனையா? வேதனையில் ஹாரிஸ் ஜெயராஜ்!

Harris Jayaraj

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இசையமைப்பாளராக கலக்கி வந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் இப்போது ஆரம்ப காலத்தை போல பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே இவர் ஆரம்ப காலத்தில் இசையமைத்து கொண்டிருந்த போது இடையில் சில காலங்கள் சினிமாவை விட்டு காணாமல் போனது தான்.

இதனால் இவருக்கு அப்படியே பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ஹீரோவாக நடித்த தி லெஜண்ட் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலும் அவர் இசையமைத்தார்.  அந்த படத்தில் இசையமைத்த பாடல்கள் சுமாரான வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வரும் பிரதர் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், தற்போது சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஓடி கொண்டு இருக்கிறது.

விஜயகாந்த் உடல்நிலை நினைத்து உயிர்விட்ட வேலுமணி…உதவிய பிரேமலதா விஜயகாந்த்.!

அந்த வெள்ளத்தின் போது ஹாரிஸ் ஜெயராஜ் வாங்கி வைத்திருந்த மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி வெளிநாட்டு கார் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாம். இதனால் சற்று வேதனையில் இருக்கிறாராம். மிக விலை உயர்ந்த லம்போர்கினி கார் என்பதால் அதனை இங்கு சரி செய்ய முடியாதாம். சரி செய்ய வெளிநாட்டு உதவிதான் வேண்டுமாம்.

ஏற்கனவே, பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு தற்போது காரும் வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ளதால் மிகுந்த வேதனையில் இருக்கிறாராம். மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு தான் லம்போர்கினி காரை வாங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube