விஜயகாந்த் உடல்நிலை நினைத்து உயிர்விட்ட வேலுமணி…உதவிய பிரேமலதா விஜயகாந்த்.!

விஜயகாந்த் உடல்நிலை நினைத்து உயிர்விட்ட வேலுமணி…உதவிய பிரேமலதா விஜயகாந்த்.!

Vijayakanth Velumani

கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் ஆரம்ப காலத்தில்  ஆக்சன் படங்கள் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் ஆகி கொண்டு இருந்தது. 1980-90 கால கட்டத்தில் ரஜினி, கமல்ஹாசனுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தவரும் இவர் தான். ஆனால், இப்பொழுது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாகவே வெளியுலகிற்கு வராமல் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மாதம் உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி இருந்த நிலையில், நவம்பர் 18ஆம் தேதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் (MIOT) மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர், அவருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. அந்த சிகிச்சை குறித்தும், விஜயகாந்த் உடல் நிலை குறித்தும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவ்வப்போது கூறி வந்தார்.

இதற்கிடையில், சில சமூக வலைதள பக்கங்களில் இருந்து அவரது உடல்நலம் குறித்து தவறான தகவல்களும் பரவின. இதற்கு பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்திகளை கேட்டு, சினிமா வசனகர்த்தா வேலுமணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டனை கேவலப்படுத்துகிறீர்கள்.. வன்மம் வேண்டாம்.! பிரேமலதா விஜகாந்த் ஆவேசம்.!

வசனகர்த்தா வேலுமணி என்பவர் விஜயகாந்த் நடித்த தேவன், எங்கள் ஆசான், விருதகிரி போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்ததுமுதல் சோகத்தில் இருந்துள்ளார். இவ்வாறு அதேயே நினைத்து கடந்த 7 ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, இயக்குனரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முடிவு செய்த விஜயகாந்த், வேலுமணியின் குடும்பத்தினருக்கு கட்சியினர் மூலம் காசோலையை வழங்கினார். இது தொடர்பாக, விஜயகாந் தனது x தள பக்கத்தில் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் என்றும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கினங்க, நேற்று (08.12.2023 )விஜயகாந்த் அவர்களின் மனைவியான பிரேமலதா விஜயகாந்த் மறைந்த தொலைபேசியில் வேலுமணிஅவரது குடும்பத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தது நிதியுதவியும் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.

Join our channel google news Youtube