வருகின்ற சுதந்திர தின விழாவில் 45-90 நிமிடங்கள் வரை பிரதமர் உரையாற்றுவார்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று இந்த வருடம் பிரதமர் மோடி 45 – 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார் என கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் அதிகளவில் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. எனவே அரசு மக்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சில தளர்வுகள் கொடுத்திருந்தாலும், விழாக்களை கொண்டாடுவதற்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில், பல்வேறு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் சுதந்திர தினவிழா கொண்டாட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் தலைநகர் மற்றும் மற்ற மாநிலங்களிலும் இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றும் விழாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுதந்திர தினத்தன்று காலை 7:21 க்கு பிரதமர் மோடி அவர்கள் செங்கோட்டை மைதானத்திற்கு வருகை தருவார்.

7.30 மணிக்கு கொடியை ஏற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் உரையாற்றுவார். நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய படைவீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஒத்திகையை தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பெரிய மாற்றமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பள்ளி குழந்தைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது, 500 என்சிசி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.

author avatar
Rebekal