கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு பிளாஸ்மா தானம் செய்த காவலர்கள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு கொல்கத்தா மாநில  காவலர்கள் இரண்டு பேர் பிளாஸ்மா தானம் செய்தனர்.

கொல்கத்தா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு பிளாஸ்மா தானம் செய்ய மும்வருமாறு ட்விட்டரில் பதிவிட்டதன் மூலம், கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் அந்த கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா தானம் செய்தனர். அந்த பதிவை கொல்கத்தா காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

அதில், “நேற்று (ஆகஸ்ட் 9 -ம் தேதி) மாலை, பிளாஸ்மா தேவை என ஒரு கொரோனா நோயாளியின் உறவினர் ஒருவர் ட்விட்டரில் எங்களை அணுகினார். அந்தவகையில், காவல்துறை கான்ஸ்டபிள் பாஸ்கர் பெரா மற்றும் டிரைவர் பப்பு குமார் சிங் ஆகியோர் பிளாஸ்மா தானம் செய்தனர்.” என தெரிவித்திருந்தனர்.