திமுகவினரின் பகல்வேஷத்தை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டனர் – சசிகலா

ஆரஞ்ச் பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என சசிகலா ட்வீட். 

ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆரஞ்சு நிற பால் விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வி.கே.சசிகலா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக தலைமையிலான அரசு ஆவினில் விற்பனை செய்யப்படும் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

திமுகவினர் தேர்தல் அறிக்கையில் ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து கொண்டு தற்போது ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியிருப்பதன் மூலம் திமுகவினரின் பகல்வேஷத்தை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக விளங்கக்கூடிய ஆவின் பாலின் விலையை திமுக தலைமையிலான அரசு உயர்த்தியிருப்பதை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment