ஐபிஎல் புதிய அணிகளின் கேப்டன்கள் இவர்கள்தான்…எத்தனை கோடி தெரியுமா? – இதோ விபரம்!

ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களுருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில்,புதிதாக சேர்க்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் தங்களது கேப்டன்களை அறிவித்துள்ளது.

வரவிருக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கான பதிவு அண்மையில் முடிவடைந்தது. அதன்படி,மொத்தம் 1214 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.இதில் 896 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்,318 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில்,கடந்த ஆண்டு வரையிலான ஐபிஎல் சீசன்களில் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில்,புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில்,ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களுருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில்,புதிதாக சேர்க்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் தங்களது கேப்டன்களை அறிவித்துள்ளன. அதன்படி,மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, அகமதாபாத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.மேலும்,லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,புதிதாக சேர்க்கப்பட்ட லக்னோ, அகமதாபாத் ஆகிய இரு அணிகளும் தலா 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.அந்த வகையில்,

லக்னோ,அகமதாபாத் அணிகள் தேர்ந்தெடுத்திருக்கும் வீரர்கள் விவரம்:

அகமதாபாத் அணி:

  • ஹர்திக் பாண்ட்யா – 15 கோடி ரூபாய்.
  • ரஷீத் கான் -15 கோடி ரூபாய்.
  • சுப்மன் கில் – 8 கோடி ரூபாய்.

லக்னோ அணி:

  • கே.எல்.ராகுல் – 17 கோடி ரூபாய்
  • ஸ்டையோனிஸ் – 9.2 கோடி ரூபாய்
  • ரவி பிஷ்னாய் – 4 கோடி ரூபாய் ஆகிய விலைக்கு 3 வீரர்களை லக்னோ அணி வாங்கியுள்ளது.

ஏற்கனவே,புதிய இரண்டு அணிகளுக்கான ஏலம் அக்டோபர் மாதம் நடந்து முடிந்த நிலையில்,லக்னோ அணியை சஞ்சீவ் கோயங்கா குழுமம் 7,090 கோடிக்கும்,சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் 5625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.