மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம்:காலையிலேயே குவிந்த தொண்டர்கள்

ஏராளமானோர் இன்று காலையிலேயே மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கூடியுள்ளனர்.

மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வுக்கு எதிராக, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.இந்த அழைப்பை ஏற்று இன்று கொல்கத்தாவில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்,தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா,திமுக தலைவர் மு.க ஸ்டாலின், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கொல்கத்தா சென்றுள்ளனர்.அதேபோல் காங்கி‌ரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பங்கேற்கிறார்.

இந்நிலையில் இந்த மாநாட்டுக்காக, ஏராளமானோர் இன்று காலையிலேயே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கூடியுள்ளனர். தொடர்ந்து தொண்டர்கள் வந்த வண்ணமே உள்ளனர். இதையடுத்து  அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment