விருப்ப தொகுதிகளின் பட்டியலை கொடுத்தது பாமக., எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?

வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக போட்டியிட விருப்பும் தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிமுக தலைமையில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்வதற்கான பேச்சுவார்த்தை நேற்று அதிமுக – பாமக இடையே நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பாமக சார்பில் ஜிகே மணி, ஏகே மூர்த்தி ஆகிய தலைவர்கள் மற்றும் அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனிசாமி, வைத்தியலிங்கம் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

அப்போது, தாங்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை பாமக கொடுத்துள்ளது. அதில், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருப்போரூர், செங்கல்பட்டு, விக்கிரவாண்டி, சங்கராபுரம், ஆரணி, பென்னாகரம், காட்டுமன்னார்கோவில், வீரபாண்டி, அணைக்கட்டு, ஓசூர், நெல்வேலி, கலசப்பாக்கம், பாப்பிரெட்டிப்பட்டி, குன்னம், சோளிங்கர், திண்டிவனம், பண்ட்ருட்டி, ஜெயகொண்டம், மேட்டூர், ஆற்காடு உள்ளிட்ட தொகுதிகளை ஒத்துக்குமாறு அதிமுகவிடம் பாமக கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்