மகளது பாதுகாப்புக்காக 20 லட்சத்தில் விமானம் அனுப்பிய மதுபான அதிபர்!

கொரோனாவிலிருந்து மகளை பாதுகாக்க 20 லட்சம் கொடுத்து வாடகைக்கு விமானம் அனுப்பிய

By Rebekal | Published: May 29, 2020 11:48 AM

கொரோனாவிலிருந்து மகளை பாதுகாக்க 20 லட்சம் கொடுத்து வாடகைக்கு விமானம் அனுப்பிய மத்திய பிரதேச மதுபான அதிபர். 

கொரோனா தொற்று உலகம் முழுவதும் மிக அதிமாக பரவி வரும் நிலையில், இதை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள மதுபான அதிபர் ஒருவரின் மகள், குழந்தைகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் டெல்லியில் வசித்து வந்துள்ளனர். 

ஊரடங்குக்கு முன்பு இவர்கள் போபால் வந்துள்ளனர். அதன் பின்பு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் டெல்லி செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். திங்கள் கிழமை உள் நாட்டு விமான சேவை துவங்கியதால், இவர்கள் நால்வருக்காக மட்டும் அனுமதி பெற்று தனியார் விமானம் ஒன்றை 20 லட்சத்துக்கு வாடகைக்கு வாங்கி சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc