‘உடன்பிறப்பே…’ என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர்! – முதல்வர் ட்வீட்

தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி என கருணாநிதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். 

முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞர் கருணாநிதி குறித்து பெருமிதத்துடன் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி; ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்; ‘உடன்பிறப்பே…’ என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர்!

இன்னும் ஓராண்டில் நூற்றாண்டு காணும் தமிழ்நாட்டின் தலைமகன் – தன் உதிரத்தால் எனைச் சமைத்த எந்தை ‘தமிழினத் தலைவர்’ கலைஞரைப் போற்றினேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment