சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது தான் ஒற்றுமை பயணத்தின் நோக்கம் – திருமாவளவன்

அனைத்து ஜனநாயக சக்திகளும் ராகுல்காந்திக்கு துணை நிற்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு.

சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது தான் ராகுல் காந்தியில் ஒற்றுமை பயணத்தின் நோக்கம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, துரை ரவிக்குமார் எம்பி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய தொல்.திருமாவளவன், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற சனாதன சக்திகளை எதிர்த்து இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் இதனை தொடங்கினார். இன்று 11வது மாநிலமாக 108வது நாளாக டெல்லியில் நடைப்பயணத்தை மேற்கொள்கிறார்.

ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளமை தலைமுறையினர் இடையே ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்திய அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்து என்றும் நம்புகிறேன் என தெரிவித்த விசிக தலைவர், சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது தான் ராகுல் காந்தியில் ஒற்றுமை பயணத்தின் நோக்கம் என தெரிவித்தார். மேலும், அனைத்து ஜனநாயக சக்திகளும் ராகுல்காந்திக்கு துணை நிற்க வேண்டும் என கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment