இந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் லிஸ்ட்… WHO வெளியிட்ட சர்வே ரிப்போர்ட்.!

ஒரு வாரம் வரையில் (டிசம்பர் 18), கொரோனா தொற்று எந்த நாடுகளில் அதிகம் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பான WHO சர்வே வெளியிட்டுள்ளது. 

தற்போது அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

கடந்த வாரம் வரையில், கொரோனா தொற்று எந்த நாடுகளில் அதிகம் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பான WHO சர்வே வெளியிட்டுள்ளது. அதில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.

இந்த வார அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான புதிய வழக்குகள் டிசம்பர் 18 வரையில் ஜப்பான் 10,46,650 பேருக்கு கொரோனா தொற்றுகளும், தென் கொரியா குடியரசில் 4,59,811 பெருக்கும், அமெரிக்காவில் 4,45,424 பேருக்கும், பிரான்ஸ் நாட்டில் 3,41,136 பேருக்கும் மற்றும் பிரேசில் நாட்டில் 3,37,810 பேருக்கும் புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

அதே போல ஒரு வார சிறப்பாக அமெரிக்காவில் 2,658 பேரும், ஜப்பான் நாட்டில் 1,617 பேரும், பிரேசில் நாட்டில் 1,133 பேரும், பிரான்ஸ் நாட்டில் 686 பேரும், இத்தாலியில் 519 பேரும் உயிரிழந்ததாக கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளது என WHO தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment